சீர்காழி அருகே பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சீர்காழி அருகே தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான தனியார்…

சீர்காழி அருகே தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு
சொந்தமான தனியார் ரால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.இந்த தொழிற்சாலையில் சற்று நேரத்திற்கு முன்பு பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா, பல்ஜித்ஓரான் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும் பணியில் இருந்த ரகுபதி, ஜாவித் , மாரிதாஸ் உட்பட 3 பேர் விபத்தில் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட சக ஊழியர்கள், சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ரகுபதி மட்டும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அனுப்பப்பட்டுள்ளார்.
தீவன தொழிற்சாலையில் பாய்லர் விபத்து  ஏற்பட்டதையொட்டி அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.