ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணமடைந்த 2 ராணுவ வீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர், ஷோபியான் மாவட்டம் ஜைனாபோரா அருகே செர்மார் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் தப்பிச் செல்வதற்காக பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் ஆயுதப்படையைச் சேர்ந்த சந்தோஷ் யாதவ், மற்றும் சவான் ரோமித் தானாஜி ஆகிய இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில், வீர மரணம் அடைந்த இரண்டு ராணுவ வீர்ர்களின் உடல்களுக்கும் ஸ்ரீநகரில் ராணுவத்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.








