அரக்கோணத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

அரக்கோணத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரக்கோணம் வழியாக சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அரக்கோணம் நார்த் கேபின் என்ற இடத்தின் அருகில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருவனந்தபுரம் செல்லும்
எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பத்தூரில் 40 நிமிடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டது.  மேலும் சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

பயணிகள் ரயில்கள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தடம் புரண்ட சரக்கு ரயிலை சரி செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.