ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேர் கைது

மதுரை அருகே சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை…

மதுரை அருகே சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவுக்குட்பட்ட சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமத்துவபுரம் சக்கிமங்கலம் ரைஸ் மில் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட தனிப்பிரிவு போலீசாருடன் தீவிர ரோந்து பணி செய்து வாகன சோதனையில் ஈடுபடும்போது, சட்டத்திற்குப் புறம்பாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற அருண்பாண்டி (31) முத்துப்பாண்டி(35) ஆகியோரை கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 46,160 டன் ரேஷன் அரிசி மற்றும் நான்கு சக்கர வாகனம் (லாரி) முன்று சக்கர (ஆட்டோ) வாகனம், இரண்டு சக்கர வாகனம் (பைக்) ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் குற்றவாளிகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு குழுவிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே. பாஸ்கரன் அவர்கள் எச்சரித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.