ராட்சத மோட்டார்கள் மூலமாக வெளியேற்றப்படும் மழைநீர்

அம்பத்தூர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் ராட்சத மோட்டர் மூலம் வெளியேற்றப்பட்டது. மேலும், கால்வாயில் முளைத்திருந்த செடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணியும் நடைபெற்றது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு…

அம்பத்தூர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் ராட்சத மோட்டர் மூலம் வெளியேற்றப்பட்டது. மேலும், கால்வாயில் முளைத்திருந்த செடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணியும் நடைபெற்றது.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் சென்னையில் பெய்த கன மழையால் அம்பத்தூர் பகுதி கொரட்டூர், வாட்டர் கேனல் சாலை, டீச்சர்ஸ் காலனி ஆகிய இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் ராட்சத மோட்டர் மூலம் வெளியேற்றப்பட்டது. மேலும், கால்வாயில் முளைத்திருந்த செடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணியும் நடைபெற்றது.

இதனை சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மற்றும் சிறப்பு அதிகாரி சுரேஷ்குமார் IAS ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ராட்சத மோட்டார்கள் மூலமாக வெளியேற்றப்படும் நீர் செல்ல கால்வாய்களை சரி செய்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.