ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்வதற்கான கட்டுபாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுமார் 40 க்கு மேற்பட்ட ஓடிடி தளங்களும், உலக அளவில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘தாண்டவ்’ மற்றும் ‘மிர்சாபூர்’ என்னும் 2 தொடர்கள் குறித்து சர்ச்சைகள் வெளிவந்தன. மேலும் அத்தொடர்களை தடை செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் அதிகமாக பாலியல் காட்சிகள், வன்முறைகள், தகாத சொற்கள் பேசுவது போன்றவைக்கு கட்டுபாடுகள் இல்லாததால், அவை பார்ப்பவர்களின் மனதை புண்படுத்தலாம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் ஓடிடியில் வெளியாகும் படைப்புகளை கண்காணிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ஓடிடியில் திரைப்படம் மற்றும் தொடர்கள் ரிலீஸ் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாகவும், விரைவில் அவற்றை வெளியிட இருப்பதாகவும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.