தமிழகத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்துக்கட்சியினரும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கும் முறையை வரவேற்ற அதிமுக, ஏப்ரல் மாதம் 4வது வாரதத்தில் தேர்தல் நடத்த கோரிக்கையை விடுத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி, “திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, மற்றும் சிபிஎம் சார்பில் டி.கே ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.