ட்விட்டர் 13 மொழிகளில் 15,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழில் கிடைக்கிறது.
ட்விட்டர் அதன் பிரபலமான தலைப்புகள் அம்சத்தின் தமிழ் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழில் பயன்படுத்தலாம். தமிழ் மொழியைப் பயன்படுத்தும் பயனர்கள் பல்வேறு தலைப்புகளில் தமிழில் பொருத்தமான உரையாடல்களை இதன் மூலம் கண்டறிந்துகொள்ளலாம். இந்தியாவில் ட்விட்டர் பயனாளர்கள் பயன்படுத்தும் மூன்றாவது மொழியாகத் தமிழ் உள்ளது. இதனால், தமிழ் மொழியைப் பயன்படுத்த அனுமதிக்கும் அனைத்து ஆண்ட்ராய்டு, iOS மற்றும் இணைய ட்விட்டர் பயனர்களும் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ட்விட்டர் தனது பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘விமானத்தில் மயங்கி விழுந்த பயணி; உதவி செய்த ஆளுநர்’
முகப்பில், தமிழ் ட்விட்டர் தலைப்புகளை மாற்றும் முறை:
முகப்பில் உள்ள பக்கத்தை ஸ்க்ரோல் செய்யும் போது, நீங்கள் பின்தொடர ஒரு தலைப்பை Twitter பரிந்துரைக்கலாம். அதைப் பின்பற்றப் பரிந்துரைக்கும் தலைப்புக்கு அடுத்துள்ள பின்தொடர் பகுதியைத் தேர்வு செய்வதன் மூலம் தமிழில் மாற்றியமைக்கலாம்.
தல, தளபதி, கிரிக்கெட், கவிதைகள் அது இதுன்னு டிவிட்டர்ல பேச பிடித்த எல்லா விஷயங்களையும் இனி சுலபமாக பார்க்கலாம் “Tamil Topics” இல்.
உங்கள் மனம்கவர்ந்த விஷயங்களை மிஸ் பண்ணாமல் இருக்க பிடித்தமான Topics ஐ Follow பண்ணுங்க.
— X India (@XCorpIndia) July 20, 2022
தலைப்புகள் மெனுவில் தமிழ் ட்விட்டர் தலைப்புகளைப் பின்தொடரும் முறை:
ட்விட்டர் ஐகானுக்குச் சென்று தலைப்புகளைத் தேர்வு செய்தால், சில விருப்பங்களுடன் ஒரு பாப்அப் தோன்றும் அதில், தலைப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவேளை, ஏற்கனவே ஏதேனும் தலைப்புகளைப் பின்தொடர்ந்திருந்தால், அவை இங்கே தோன்றும். இந்தப் பட்டியலிலிருந்து தமிழ் தலைப்புகளை உறுதிப்படுத்தலாம்.
Yasssss! Now our @Samanthaprabhu2 is a #TamilTopic on @TwitterIndia! Finally 😁 pic.twitter.com/kL8o3U2D9e
— Samantha Fans (@SamanthaPrabuFC) July 20, 2022








