விமானத்தில் மயங்கி விழுந்த பயணி; உதவி செய்த ஆளுநர்

விமானத்தில் பயணி ஒருவர் மயங்கி விழுந்த பொழுது ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவருக்கு முதலுதவி அளித்து அவருக்கு சிகிச்சை செய்துள்ளார். இந்த புகைப்படங்கள்  தற்போத சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தெலுங்கானா…

விமானத்தில் பயணி ஒருவர் மயங்கி விழுந்த பொழுது ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவருக்கு முதலுதவி அளித்து அவருக்கு சிகிச்சை செய்துள்ளார். இந்த புகைப்படங்கள்  தற்போத சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று அதிகாலை 3 மணியளவில் டெல்லியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த நிலையில், “யாராவது மருத்துவர் இருக்கீங்களா? சக பயணி ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளார் என்று விமான பணிப்பெண் அறிவிப்பு விடுத்துள்ளார்.

அறிவிப்பைக் கேட்டு, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இதுகுறித்து பணிப்பெண்னிடம் விசாரித்து உடனே சென்று பார்த்த போது, பயணி ஒருவருக்கு
உடம்பெல்லாம் வியர்த்து, மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக, முதலுதவி
சிகிச்சை அளித்து அவர் கண் விழித்ததும் அவர் அருகிலேயே அமர்ந்து துணைநிலை
ஆளுநர் பயணித்துள்ளார்.

மேலும் விமானத்தை விட்டு இறங்கியதும் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு சரியான நேரத்தில் தகவல் தந்து ஒருவரின் உயிரை காப்பாற்ற உதவிய விமான பணிப்பெண்ணுக்கு பாராட்டுக்களை தெரிவித்துவிட்டு, ஹைதராபாத் ராஜ் பவனிற்கு தமிழிசை சவுந்தரராஜன் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் விமானத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவசர மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்ததை சக பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.