எக்ஸ் ப்ரோவாக மாறிய ட்வீட்டெக்… அடுத்தடுத்து பயனர்களுக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்…

ட்விட்டர் (X) பயனர்கள், இதுவரை இலவச சேவையாக அனுபவித்து வந்த ஆன்லைன் டாஸ்போர்டு சேவையான ட்வீட்டெக் அம்சம் தற்போது சந்தா செலுத்தும் பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.  ட்விட்டர் (X) பயனர்கள் தாங்கள்…

ட்விட்டர் (X) பயனர்கள், இதுவரை இலவச சேவையாக அனுபவித்து வந்த ஆன்லைன் டாஸ்போர்டு சேவையான ட்வீட்டெக் அம்சம் தற்போது சந்தா செலுத்தும் பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. 

ட்விட்டர் (X) பயனர்கள் தாங்கள் பின்பற்றும் கணக்குகளை ஒழுங்கமைத்து, மைக்ரோ பிளாக்கிங் தளத்தை சிறப்பாக நிர்வகிக்க அனுமதிக்கும் கருவியான TweetDeck அம்சம், வணிக நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.  இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

ட்விட்டரில் சரிபார்க்கப்பட்ட (அல்லது) வெரிஃபைடு அதாவது Twitter blue குறியீடு பெற ஒரு குறிப்பிட்ட சந்தா தொகையை பயனாளர்கள் கட்ட வேண்டும். அவ்வாறு சந்தா தொகை செலுத்திய பயனர்கள் மட்டுமே, இந்த TweetDeck வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று, ட்விட்டர் நிறுவனம் அண்மையில் அறிவித்தது. மேலும் இந்த புதிய நடைமுறை, விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

எலான் மஸ்க் தலைமையின் கீழ், விளம்பரதாரர்களை தக்க வைக்க போராடிய ட்விட்டர் (X) நிறுவனத்திற்கு, இந்த நடைமுறை, வருவாயை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சரிபார்க்கப்படாத கணக்குகளுக்கு ஒவ்வொரு நாளும் பார்க்கக் கூடிய ட்வீட்களின் எண்ணிக்கையை 1,000 ஆக கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல கடுமையான மாற்றங்களை எலான் மஸ்க் அறிவித்ததன் பரபரப்பு அடங்குவதற்குள், TweetDeck குறித்த அறிவிப்பு, அதன் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது.

இந்நிலையில் இந்த ட்வீட்டெக் அம்சம் தற்போது எக்ஸ் ப்ரோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கட்டுப்பாடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இனி எக்ஸ் ப்ரோ அம்சத்தை பயன்படுத்த, பயனர் கண்டிப்பாக புளூ டிக் சந்தாதாரராக இருத்தல் அவசியம். ஏற்கனவே ட்விட்டர் புளூ குறியீடு சேவை தொடங்கிய முதல் வாரங்களில் உலக அளவில் கிட்டத்தட்ட 40 கோடி பயனர்கள் உபயோகித்ததாகவும், அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ் ப்ரோ ப்ளூ சந்தா மாதம் ரூ.650 மற்றும் ஒரு ஆண்டிற்கு விலை ரூ.7,800. மேலும் வருடாந்தர சந்தாவில் 12% தள்ளுபடியை வழங்கப்படுவதாகவும், ரூ.6,800 செலுத்தினால் போதும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.