தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடலுக்கு தவெக தலைவர் விஜய் அஞ்சலி…!

மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடலுக்கு, தவெக தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி நேற்று காலமானார். சொந்த ஊரான ராஜஸ்தானின் உதய்பூருக்கு சென்ற நிலையில் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடலுக்கு, தவெக தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நடிகர் ஜீவாவை கட்டி பிடித்து கண் கலங்கினார்.

விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக, ஜில்லா, திருப்பாச்சி, லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜஹான் போன்ற படங்கள் ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் ப்ளிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்ததாகும். முன்னதாக சூப்பர் குட் ப்ளிம்ஸின் 100 வது படத்தை விஜயை கொண்டு தயாரிக்க விரும்பதாக ஆர்.பி. சௌத்ரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.