முக்கியச் செய்திகள் உலகம்

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 9,500 ஆக உயர்வு!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,500-ஐ கடந்துள்ளது.

துருக்கியில் கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5,775 கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7,500 பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான துருக்கி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இஸ்கெண்டருன் துறைமுகத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கண்டெய்னர்கள் எரிந்து சேதமடைந்தன. தீயை அணைக்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டனர். நிலநடுக்கத்தின்போது கீழே விழுந்த கண்டெய்னர்களால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 2 விமானங்கள் துருக்கி சென்றடைந்தன. இந்த விமானங்களில், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அவசரகால மருந்து பொருட்கள் ஆகியன துருக்கி மற்றும் சிரியாவுக்கு சென்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் – வீரமணி

EZHILARASAN D

திமுக கூட்டணியிலிருந்து விலகலா? கே.எஸ்.அழகிரி பதில்

EZHILARASAN D

டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கிகள் பறிமுதல்

G SaravanaKumar