உலகம்

கொலை முயற்சியில் இருந்து தப்பிய துனிசிய அதிபர் கைஸ் சையது..

கடிதத்தில் விஷம் தடவி கொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் இருந்து துனிசிய அதிபர் கைஸ் சையது உயிர் தப்பினார்.

துனிசிய நாட்டு அதிபராக கைஸ் சையது இருந்து வருகிறார். கடந்த 25ம் தேதி அனுப்புநர் குறித்த தகவல் ஏதும் இல்லாமல் அவருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. யார் அனுப்பியது என்ற முகவரி இல்லாததால் அந்த கடிதம் அவரது உதவியாளர் நதியா அகாச்சாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை அவர் பிரித்துபார்க்கும் போது கடிதத்தில் ஏதும் எழுதப்படாமல் வெறும் காகிதம் இருந்துள்ளது. ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் தலை சுற்றி, பார்வை இழப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து, உடனடியாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த கடிதத்தை ஆய்வு செய்ததில் அதில் விஷம் தடவப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த தகவலை துனிசிய அதிபர் மாளிகை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துனிசிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் மொஹ்சென் தாலி வெளியிட்ட செய்தி குறிப்பில், “இந்த வழக்கு தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் இந்த செய்தியை அன்றே வெளியிடவில்லை. தொடர்ந்து நதியா அகாச்சா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

நிலவுக்கு ஃப்ரீ டிக்கெட் : ஜப்பான் தொழிலதிபர் அறிவிப்பு

Jeba Arul Robinson

ஏழை நாடுகளுக்கு 0.2% மட்டுமே கொரோனா தடுப்பூசி விநியோகம்!

எல்.ரேணுகாதேவி

ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய வடகொரியா!

Leave a Reply