ஜார்க்கண்டில் மாணவர் போராட்டம் வெற்றி – JSSC-CGL தேர்வுகளை ரத்து செய்தது மாநில அரசு!

ஜார்க்கண்டில் மாணவரகள் போராட்டத்தை தொடர்ந்து JSSC-CGL தேர்வுகளை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (JPSC) மற்​றும் ஊழியர் தேர்வு வாரி​யம் (JSSC) மூலம் நடத்​தப்​படும் தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடப்​ப​தாகக் கூறி மாணவர்​கள் கடந்த சில வாரங்களாக போராடி வரு​கின்​றனர். ஏற்கனவே மாநில அரசு மாணவர்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனிடையே மாநில முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த நிலையில் நேற்று அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன்  அமைச்சரவையை கூட்டி மாணவர் போராட்டம் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து, JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பால் போராடி வந்த மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.