குஜராத்தி மொழியில் கேள்வி எழுப்பிய டிஆர்எஸ்: உருது மொழியில் பதிலளித்த பாஜக

தெலங்கானாவில் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. பாஜக 3 எம்எல்ஏக்களை கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கருத்து…

தெலங்கானாவில் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. பாஜக 3 எம்எல்ஏக்களை கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருவார்கள். பாஜகவும் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில், பிரதமர் மோடிக்கு குஜராத்தி மொழியில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில், “எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தெலங்கானவை நடத்தி வருவது ஏன்?” என்பது உள்பட 13 கேள்விகளை குஜராத்தி மொழியில் குறிப்பிட்டு டிஆர்எஸ் கேட்டிருந்தது.

இதற்கு உருது மொழியில் அந்த மாநில பாஜக பதிலளித்துள்ளது. அகில இந்திய மஜ்லிஸ் கட்சியுடன் தெலங்கானா ராஷ்டிர சமிதி நட்பு பாராட்டி வருவதைக் குறிக்கும் வகையில் பாஜக உருது மொழியில் ட்வீட் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

ஐதராபாத் நகரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருவதாக பாஜக அறிவித்த உடனே தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் ஹாஷ் டேக்குகளை உருவாக்கினர்.

இதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக சில ஹாஷ் டேக்குகளை உருவாக்கியது. இதுகுறித்து அரசியல் ஆய்வாளர் எஸ்.ராமகிருஷ்ணா கூறுகையில், “சமூக வலைதலங்களில் இதுபோன்று இரு கட்சிகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபடுவது சில சமயங்களில் மிகவும் மோசமான வகையில் இருக்கும். தேர்தல் காலம் என்றால் இந்த மோதல் போக்கு இன்னும் அதிகமாகக் காணப்படும். ஏனென்றால் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் மூலமாக அதிகம் பேரை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.