அஜித்தை தொடர்ந்து #Trisha… வைரலாகும் புகைப்படம்!

அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ள திரிஷாவின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி…

அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ள திரிஷாவின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 2025-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு 90% முடிவடைந்துள்ளது. அடுத்ததாக படக்குழு, 2ம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. அதன்படி ரஷ்யாவில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் நடித்திருக்கும் த்ரிஷா, அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் இணைந்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜித் ரசிகர்களுக்கு படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திடீரென அஜித்தின் புகைப்படங்களை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் புதிய தோற்றமுடைய புகைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். தற்பொழுது படத்தில் திரிஷா தோற்றம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துகொண்டே செல்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.