முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக கூட்டணி? – கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன

திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தகவல் தெரிவிக்கின்றன.

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுராவில் கடந்த 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மேகாலயாவில் சேகியாங் என்ற தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திரிபுராவில் கடந்த 16ம் தேதி 88 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. நாகாலாந்து மாநிலத்தில் 8.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேகாலயாவில் 74.32 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

அண்மைச் செய்தி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளது – வானதி சீனிவாசன்

இந்தியா டுடே மற்றும் ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின் படி, திரிபுராவில் பாஜக 36-45 இடங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி 6-11 இடங்கள் பெற வாய்ப்புள்ளதாகவும் திப்ரா மேத்தா கட்சி 9-16 இடங்கள் பெற வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

மேலும் மேகாலயாவில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சியை தக்கவைக்கும் என்றும் நாகாலாந்தில் என்டிபிபி-பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் எனறும் இந்திய டுடே கணித்துள்ளது. மேகாலயாவில் பாஜக 3-6 இடங்களிலும் காங்கிரஸ் 2-5 இடங்களிலும் என்பிபி 18-26 இடங்களிலும் டிஎம்சி 8-14 இடங்களில் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் சேனல் கணித்துள்ளது.

 

நாகாலாந்தில் பாஜக -என்டிபிபி கூட்டணி 38-48 இடங்களிலும் காங்கிரஸ் 1-2 இடங்களிலும் என்பிஎஃப் 3-8 இடங்களிலும் மற்றவை 6-12 இடங்களில் வெற்றி பெறும் என இந்திய டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிநவீன மருத்துவமனை; பார்வையிட்ட தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

EZHILARASAN D

தொழிலதிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; ஒருவர் கைது

EZHILARASAN D

ரோஹித் சர்மாவின் உடற்தகுதியை விராட் கோலியுடன் ஒப்பிட்டு கபில்தேவ் விமர்சனம்

Web Editor