#Tripurafloods – இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.  வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல…

திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது. 

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் இதுவரை மாநிலம் முழுவதும் 17 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 450 நிவாரண முகாம்களில் 65,000 மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அகர்தலாவை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு விமானம் மூலம் உணவு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : #Vaazhai திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று திரிபுரா முதலமைச்சர் மானிக் சாஹா அறிவித்துள்ளார். முன்னதாக கனமழையால் 22 பேர் உயிரிழந்ததாகவும், இரண்டு பேரை காணவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.