#Vaazhai திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

நெல்லையில் வாழை திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க வந்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. மாமன்னன் திரைப்படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும்…

நெல்லையில் வாழை திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க வந்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாமன்னன் திரைப்படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன், நிகிலா விமல், ஜே.சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளன. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்துள்ள நிலையில், இன்று திரைக்கு வந்துள்ளது வாழை திரைப்படம்.

மாரி செல்வராஜ் தனக்கென ஒரு சினிமா பாணியை உருவாக்கி உள்ள நிலையில், அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்புடனும் திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையிலும் வெளியாகியுள்ள வாழை திரைப்படம் முதல் நாளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது.

இந்நிலையில், நெல்லை ராம் சினிமாஸில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டுகளித்தார். முன்னதாக வாழை திரைப்படம் வெளியாகி உள்ள ராம் சினிமாஸ் திரை அரங்கினை வாழைமரம் கொண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் நற்பணி மன்றத்தினர் அலங்கரித்து வைத்திருந்தனர். தொடர்ந்து திரைப்படம் பார்க்க வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த மாரி செல்வராஜிற்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆள் உயர மாலை அணிவித்து அவரை ரசிகர்கள் தோளில் வைத்து தூக்கி ஆரவாரப்படுத்தினர் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து கண்டு ரசித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.