முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

முதலமைச்சருக்கு எதிராக வீடியோ: நடிகை மீது கொலை வழக்குப் பதிவு

திரிபுரா முதலமைச்சருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நடிகையும் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான சாயோனி கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அங்கு பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேவ் பொதுகூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அந்தக் கூட்டம் நடைபெற்றபோது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாயோனி கோஷ், அந்தப் பகுதியில் காரில் சென்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வரும் 25 ஆம் தேதி அகர்தாலாவில் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதை அடுத்து, மாநில முதலமைச்சர் பிப்லாப் தேவ் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். அப்போது, முதலமைச்சரின் கூட்டத்தில், 50 பேருக்கும் குறைவானவர்களே கலந்துகொண் டிருக்கின்றனர். எங்கள் வேட்பாளரின் கூட்டங்களில் இதைவிட அதிகமானோர் கலந்து கொள்கிறனர். பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது’ என்று ட்விட்டரில் கூறியிருந்தார் சாயோனி கோஷ்.

கூடவே வீடியோவும் வெளியிட்டிருந்தார்.

இந் நிலையில் அகர்தலாவில், சாயோனி கோஷ் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பெண் போலீசார் சென்று விசாரணைக்காக, அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால், திரிணாமுல் தொண்டர்களும் அங்கு சென்றனர். அப்போது, பாஜக தொண்டர்களை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக போலீசார், சாயோனி கோஷை கைது செய்தனர்.

இதுபற்றி திரிபுரா கூடுதல் எஸ்.பி. ஜகதீஷ் ரெட்டி கூரும்போது, ’சாயோனி கைஷ் மீதான குற்றச்சாட்டுக்கு  ஆதாரம் இருந்ததால் அவரை கைது செய்தோம்’ என்றார். சாயோனி, கைது செய்யப்பட்ட நிலையில் 25-க்கும் மேற்பட்ட பாஜகவினர், ஹெல்மெட் அணிந்து போலீஸ் ஸ்டேஷனில், திரிணாமுல் தொண்டர்களை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் மூத்த தலைவர் குணால் கோஷ், திரிபுராவில் காட்டாட்சி தர்பார் நடக்கிறது. போலீசார் முன்னிலையிலேயே நாங்கள் தாக்கப்பட்டோம். அவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்’ எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, அகர்தலாவுக்குப் புறப்பட்டார். ஆனால் திரிபுராவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

ஹைதராபாத் அணியைப் பழிதீர்த்த வார்னர்!

Halley Karthik

ஓவியத்தின் மூலம் காதலை பிரபோஸ் செய்த நபர் – சினிமாவை மிஞ்சிய வைரல் வீடியோ

Web Editor

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை, மீட்க அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

Arivazhagan Chinnasamy