திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கீழக்கள்ளுகுடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள கீழக்கள்ளுகுடி கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி அம்மன் திருக்கோயி.இக்கோயிலில் கடந்த சில நாட்களாக திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன.
இவ்வேலைகள் முடிவுற்றதையொட்டி நேற்று கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து நான்கு கால யாக பூஜைகளும் செய்யப்பட்டன.
தொடர் நிகழ்வாக வேத மந்திரங்கள் முழங்க கடம் கோயிலை வலம் வந்து புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தேறியது.இதில் நரசிங்கமங்கலம்,சமயபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
வேந்தன்








