உலகின் நம்பர் ஒன் வீரர் அல்கரசை வீழ்த்தி, சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் சாம்பியன் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்கரஸூம், நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் அல்கரஸ் கைப்பற்றினார். இதன் பின்னர் தனது தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 7-6 (9-7), 7-6 (7-4) என்ற புள்ளி கணக்கில் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார். இறுதியில் ஜோகோவிச் 5-7, 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் ஜோகோவிச், 2-1 என்ற செட்களை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ATP டென்னிஸ் வரலாற்றில் தனது 95 ஆவது பட்டத்தை கைப்பற்றி, இதற்கு முன்னதாக 94 பட்டங்களை வென்ற இத்தாலியின் இவன் லென்டில் ஐ பின்னுக்கு தள்ளி 3 ஆவது இடத்திற்கு முன்னேறினார். மேலும் முதல் இடத்தில் 109 பட்டங்களுடன் ஜிம்மி கார்ணர்ஸ், இரண்டாவது இடத்தில் 103 பட்டங்களுடன் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் உள்ளனர்.







