முக்கியச் செய்திகள் குற்றம்

போதை ஆசாமியை பிடிக்க முயன்ற காவலருக்கு கத்தி குத்து

திருச்சி அருகே மதுபோதையில் பேருந்தை வழி மறித்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியை பிடிக்க முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார்(45). இவர் சோமரசன்பேட்டை அடுத்துள்ள சுண்ணாம்புகாரப்பட்டியில் சாலை நடுவில் மதுபோதையில் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தி உள்ளார். மேலும், அப்பகுதியில் வந்த பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட அப்பகுதிமக்கள் எரிந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் தீயை அனைத்து அவரை சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனால், அந்த நபரோ குடிபோதையில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் கார்த்தி, சாந்தகுமாரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த அவர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் கார்த்தியை குத்தி உள்ளார். இதில் கார்த்திக்கு இரண்டு
இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் சாந்த குமாரை மடக்கி பிடித்தனர். பின்னர் கார்த்தி, சாந்தகுமார் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Gayathri Venkatesan

நடுக்கடலில் கொந்தளித்த தீ : வைரலாகும் வீடியோ

Gayathri Venkatesan