திருச்சி #NIT விடுதி காப்பாளர்கள் 3 பேர் பதவி விலகல்! பின்னணி என்ன?

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக விடுதியில் பாலியல் புகார் தொடர்பான சர்ச்சையை அடுத்து மகளிர் விடுதி காப்பாளர்கள் 3 பேர் விலகினார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியின் விடுதியில் இருந்த மாணவியரிடம்,…

Trichy #NIT college hostel keeper Baby resigns! What is the background?

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக விடுதியில் பாலியல் புகார் தொடர்பான சர்ச்சையை அடுத்து மகளிர் விடுதி காப்பாளர்கள் 3 பேர் விலகினார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியின் விடுதியில் இருந்த மாணவியரிடம், ஒப்பந்த ஊழியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் 12 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, விடுதி வார்டன் உள்ளிட்டோர் மாணவர்கள் முன்னிலையில் மன்னிப்பு கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி என்ஐடி கல்லூரி விடுதி காப்பாளர் பேபி பதவி விலகினார். மேலும் 2 விடுதிக்காப்பாளர்களான சபிதா பேகம், மகேஸ்வரி ஆகியோரும் பதவி விலகியதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து என்ஐடி கல்லூரி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.