திருச்சி லால்குடி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு
நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 350 காளைகள் பங்கேற்றன.
திருச்சி மாவட்டம் லால்குடி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு
ஆண்டுதோறும் பூச்சொரிதல் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது
வழக்கம். அந்த வகையில் 59-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.
திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை போன்ற பல்வேறு
மாவட்டங்களில் இருந்து சுமார் 350 காளைகளும் 250 மாடு பிடி வீரர்களும் இந்த
ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து துள்ளி
குதித்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கி மகிழ்ந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும்
பரிசுப் பொருட்களை விழாக்குழுவினர் வழங்கினர்.
லால்குடி காவல் சரக டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் சுமார் 300-க்கும் அதிகமான
காவல்துறையினர் ஜல்லிக்கட்டுப் போட்டி முன்னிட்டு பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—ரெ.வீரம்மாதேவி