உலக வன தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் விதை அறக்கட்டளை சார்பில் ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேருந்து நிலைய பகுதியில், இத் திட்டத்தை நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா துவங்கி வைத்தார். மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு மா, பலா, கொய்யா போன்ற மரகன்றுகளையும் வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை தொடர்ந்து இந் நிகழ்வில் காவல்துறையினர் , நகராட்சி அதிகாரிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்று காடுகள் பாதுகாப்பு குறித்து உறுதி மொழி எடுத்தனர். இதையடுத்து அப்பகுதி பொது மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.
–கோ. சிவசங்கரன்