நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர், தலைமச் செயலகத்தில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார்.








