போக்கு காட்டும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறை

கோவையில், குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மூன்றாவது நாளாக ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை,…

கோவையில், குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மூன்றாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை, வாளையாறு சாலையில் உள்ள பாழடைந்த குடோனில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து குடோனை வலை கொண்டு மூடிய வனத்துறையினர் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கேமிராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், கடந்த 2 நாட்களாக சிறுத்தை கூண்டுக்குள் அகப்படாமல் போக்கு காட்டி வருகிறது. மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தால் குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி சிறுத்தை காயமடைய வாய்ப்புள்ளதாக கூறும் வனத்துறை அதிகாரிகள், கூண்டிலேயே சிறுத்தையை பிடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
போக்கு காட்டி வரும் சிறுத்தையை பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல், பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.