ரூ.1111-க்கு விமானத்தில் பயணம்… #IndiGoவின் புதிய அறிவிப்பு!

வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் Grand Runway Fest Sale-ஐ தொடங்கியுள்ளது இண்டிகோ நிறுவனம். விமான நிறுவனமான இண்டிகோ, பயணிகளுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையின்படி…

Travel from Rs.1111...New Announcement of #IndiGo!

வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் Grand Runway Fest Sale-ஐ தொடங்கியுள்ளது இண்டிகோ நிறுவனம்.

விமான நிறுவனமான இண்டிகோ, பயணிகளுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையின்படி ரூ.1111க்கே விமான டிக்கெட்டுகள் கிடைக்கும். ஆனால் இந்த சலுகை செப்.24 முதல் செப்.30ஆம் தேதி வரை மட்டுமே உள்ளது. அதாவது, அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 31 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை செப்.30ஆம் தேதி வரை சலுகை விலையில் முன்பதிவு செய்யலாம்.

இந்தச் சலுகையில் பாங்க் ஆப் பரோடா மற்றும் பெடரல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் 15 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று இண்டிகோ (IndiGo) தெரிவித்துள்ளது. இதற்கு பெடரல் வங்கிக் கணக்கில் FED15 என்ற கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். பேங்க் ஆஃப் பரோடா கணக்கில் 6EBOB என்ற கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த சலுகையைப் பெற குறைந்தபட்சம் ரூ. 5000 மதிப்புள்ள டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.