சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் முன்னாள் மாணவிகள் அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை கைது செய்தது.
கைதான சிவசங்கர் பாபா சிறையில் தற்போது உள்ளார். 3 போக்சோ வழக்குகள் வழக்குகள் இவர் மீது பதியப்பட்டுள்ளது. அதில் ஒரு போக்சோ வழக்கு சிபிசிஐடி போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபா மீதான 2-வது போக்சோ வழக்கின் குற்றப்பத்திரிகை இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக குணவர்மனை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக மாணவிகளுக்கு வலுக்கட்டாயமாக சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.








