முக்கியச் செய்திகள் இந்தியா

“2024 தேர்தலுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவோம்” – எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி கோரிக்கை

“2024 தேர்தலுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவோம்” என எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் “கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நாம் இதுபோன்று ஒரு கூடாரத்தில் சந்திக்கவில்லை என்றாலும் அனைவரும் பல்வேறு விவகாரங்கள் வழியாக தொடர்பிலேயே இருந்தோம், கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றாக செயல்பட்டோம். ஓ.பி.சி மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து நிறைவேற்றினோம், 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு செய்த தவறை திருத்த வைத்தோம், மாநிலங்களின் உரிமையை நிலை நாட்டினோம். இரு அவைகளுக்கு உள்ளே தொடர்ந்த இந்த ஒற்றுமை வருங்காலத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே நடத்தவேண்டிய போராட்டத்திலும் தொடரும் என நம்புகிறேன். குறிப்பாக வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்த ஒற்றுமை தொடர வேண்டும். தேர்தலுக்காக தற்போதே திட்டமிடுதலை தொடங்க வேண்டும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.” என எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரியுள்ளார்.

 

அதேபோல, “நமக்குள் பல வேறு கருத்துகள் இருந்தாலும் நம் தேச நலனுக்கான, தேசத்தின் தேவைக்காக ஒன்றாக ஒரே குறிக்கோளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.”

“நமக்கு முன்னிருக்கும் சவாலை இணைந்து சமாளிக்க முடியும், எனவே நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும், ஏனெனில் ஒன்றிணைந்து செயல்படுவதை தவிர வேறு எந்த மாற்று வழியும் இருப்பதாக தெரியவில்லை. இந்த 75வது சுதந்திர ஆண்டு, நாம் நமது தனிப்பட்ட மற்றும் கூட்டுத் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாகும்.” என்றும் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கண்களை கட்டி ரூபிக் கியூப் விளையாடி 13 வயது சிறுமி சாதனை

Jayapriya

டிவி விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

Ezhilarasan

வங்கத்தின் சிங்கப் பெண் மமதா பானர்ஜி!