வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் துணை ஆட்சியர் நிலையில் உள்ள 24 அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் வேறு பதவிகளில் பணி நியமனமும் செய்யப்பட்டுள்ளனர். வருவாய் துறை மூலமாக பல்வேறு சேவைகள் மக்களை எளிதாக சென்றடைய, முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில், சென்னை கிண்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதேபோலா, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக 24 துணை ஆட்சியர் நிலையில் உள்ளவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்தது’
அதன்படி, துணை ஆட்சியர் நிலையில் உள்ள உ.அர்ச்சனா, வ.யுரேகா, க.மகாலட்சுமி, ஜா.அஜிதா பேகம், மை.ஜெயராஜ பெளலின், பா.ரூபினா, ர.ஐஸ்வந்த் கண்ணன், பா.சரவணன், கு.பூமா, அ.அபிநயா, நா.மா.கனிமொழி, கு.சுகிதா, சு.பவித்ரா, பா.வினோத் குமார், ர.பாத்திமா, ர.பாத்திமா, மு.செளம்யா, இரா.இரா.விஸ்வநாதன், நா.அ.சங்கீதா, ர.கீர்த்தனா மணி, ம.சதிஸ் குமார், கு.திவ்யபிரியதர்ஷினி, ம.தனலட்சுமி, ச.சுப்புலெட்சுமி (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்), த.அனிதா (வருவாய் கோட்டாட்சியர்) ஆகியோர் ஆளுநரின் ஆணைப்படி வேறு பணிக்கு நியமனம் செய்து மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








