திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் காய்ச்சலால் உயிரிழந்தார்.
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்து என்ற மாணவி நேற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மர்மக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மருத்துவர் ஒருவரே காய்ச்சலால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது







