முக்கியச் செய்திகள் தமிழகம்

பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிசெய்ய மறுப்பு தெரிவித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 347 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், பயிற்சி மருத்துவர்களையும் நோய் சிகிச்சை பிரிவில் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் கொரோனா பிரிவில் பணிபுரிய பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் பணி ஒதுக்கீடு செய்தது. இந்தநிலையில் தங்களுக்கு பாதுகாப்பு வழிமுறை மற்றும் உரிய சலுகை வழங்காமல் பணி செய்ய வலியுறுத்தப்படுவதாக கூறி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Advertisement:
SHARE

Related posts

கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Halley karthi

திருச்சி: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் – 8 பேர் கைது

Nandhakumar

கொரோனா காலத்தில் படிப்பினைகள் கிடைத்துள்ளன: வெங்கையா நாயுடு

Ezhilarasan