#TrainCancelled | மதுரை – சென்னை எழும்பூர் ரயில் சேவை ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது, “தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்…

#TrainCancelled | Madurai - Chennai Egmore train service cancelled!

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது,

“தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, இன்று (செப்.5) இரவு 8.50 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை புறப்படும் ரயிலும் (வண்டி எண்:22624), அதேபோல், நாளை செப்.6 அன்று இரவு 10.05 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு புறப்படும் ரயிலும் (வண்டி எண். 22623) ரத்து செய்யப்படுகிறது.”

இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.