முட்டை பானி பூரி தெரியுமா? சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முட்டை பானி பூரி செய்முறை வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பானி பூரிக்கு தனி ரசிகர்கள் உண்டு. தெருவோர கடைகளில் விற்பனை…

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முட்டை பானி பூரி செய்முறை வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பானி பூரிக்கு தனி ரசிகர்கள் உண்டு. தெருவோர கடைகளில் விற்பனை செய்யப்படும் பானி பூரியை ஏராளமானோர் காத்திருந்து சுவைத்து செல்வார்கள். ஒரு தெருவில் சிறிய கூட்டம் காணப்பட்டால் அது பானி பூரி கடை என எளிதாக யூகித்து விடலாம்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த காரமான சுவையான சிற்றுண்டியை மக்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில் பானி பூரி பலரின் விருப்பமான தெரு உணவு. சிறுவர் முதல் முதியோர் வரை ஆங்காங்கே விற்கப்படும் பானி பூரியை உண்டு மகிழ்கிறார்கள்.

இந்நிலையில் சூரத்தை சேர்ந்த ஜனக் பர்டோலியா என்பவர் இன்ஸ்டாவில் முட்டை பானி பூரி செய்முறை குறித்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற பானி பூரி தயாரித்து அதன் உண்மையான சுவையை கெடுத்து விடாதீர்கள் என இணையதள வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.