சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தமிழ்நாடு அரசு அனைத்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை இரு சக்கர மோட்டார் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாட்டு வீரர் ராபின் உத்தப்பா கலந்துகொண்டு கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த ராபின் முத்தப்பா, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டேன் என தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு அனைத்து விளையாட்டிற்கும் முக்கியத்துவம் மற்றும் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்த ராபின் உத்தப்பா, கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுக்கப்பட்ட ஆதரவை போல அனைத்து விளையாட்டுக்கும் முன்னுரிமை கொடுத்தால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என கூறினார்.
– இரா.நம்பிராஜன்








