குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்தால், அருவிக்கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி…

நீண்ட நாட்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்தால், அருவிக்கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக சீசன் தொடங்கப்பட்ட நிலையிலும் அருவிகள் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்ட நிலையில் இருந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிக்கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.