மாணவர்கள் கல்வி செழிக்க, உயர்கல்வியில் சிறந்து விளங்க நியூஸ்7 தமிழ் சார்பில் மகா கல்வி யாகமானது மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் தற்போது நடைபெற்று வருகிறது.
திருவிளையாடல் புராணம், பரிபாடல் உள்ளிட்ட சங்க கால பாடல்களில் இடம்பெற்ற மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் கல்வி மகாயாகம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மாணவர்கள் கல்வியில் செழித்து, உயர்கல்வியில் சிறந்து விளங்கப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அண்மைச் செய்தி: ‘எழுத்தாளர் மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது; முதலமைச்சர் வாழ்த்து’
https://twitter.com/news7bakthi/status/1540222053525385218
கல்வியில் மாணவர்களின் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க விநாயகர், சரஸ்வதியை வேண்டி பிரமாண்ட மக யாகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு பயம் நீங்கவும், தேர்வு தோல்வி போன்ற எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் மாணவர்களுக்கு உருவாகவும் கல்வி மகா யாகம் நடத்தப்பட்டு வருகிறது. காலை 9.30 மணிக்குத் தொடங்கி 12 மணி வரை இந்த யாக பூஜை நடைபெறுகிறது. மதுரை மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் இருந்து மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றுள்ளனர்.







