முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி உதகையில் அமைந்துள்ள
சுற்றுலாத்தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை ஒட்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களில்
இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான
சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இதில் உதகையில் அமைந்துள்ள மிகச்சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான
தென்னிந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலை சிகரத்தில்  அமைந்துள்ள காட்சி முனையை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை முதல் குவிந்தனர்.

மேலும் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அமைந்துள்ள தொலைநோக்கி டெலஸ்கோப் கருவி மூலம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வானுயர்ந்த மலைகளையும், பச்சை பசேல் என காட்சி அளிக்கும் வனப்பகுதிகளையும், மாநில எல்லைப் பகுதிகள் மற்றும்
மாவட்டத்தின் எல்லை பகுதிகளையும் கண்டு ரசித்தும் செல்பி புகைப்படங்கள்
எடுத்தும், உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து விடுமுறை நாளை
கொண்டாடி மகிழ்ந்தனர்.


இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி உதகையில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க வருகை புரிந்ததாகவும் உதகையில் நிலவும் இதமான கால நிலையில் உதகை தொட்டபெட்டா மலை சிகரத்தில் அமைந்துள்ள காட்சி முனைகளை கண்டு ரசித்தது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தபால்துறை தேர்வுகளை தமிழில் எழுதலாம்; மத்திய அரசு அறிவிப்பு!

Saravana

திருச்செந்தூர்- திருநெல்வேலி ரயில் போக்குவரத்தின் நூற்றாண்டு விழா!

Web Editor

டீசல் திருடியதாக ஓட்டுநர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ

G SaravanaKumar