2022- ஆம் ஆண்டுக்கான புதிய பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் “ஆர்’போனி கேப்ரியல்”

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்’போனி கேப்ரியல் 2022- ஆம் ஆண்டுக்கான புதிய பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். $5.58 மில்லியன் மதிப்பிலான நீலக்கல் பதிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்துடன் அவர் கௌரவிக்கப்பட்டார். உலகெங்கிலும் உள்ள பெண்களை…

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்’போனி கேப்ரியல் 2022- ஆம் ஆண்டுக்கான புதிய பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். $5.58 மில்லியன் மதிப்பிலான நீலக்கல் பதிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்துடன் அவர் கௌரவிக்கப்பட்டார்.

உலகெங்கிலும் உள்ள பெண்களை கொண்டாடும் விதமாக 71- வது ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கான நிகழ்ச்சிகள் நேற்று ஜனவரி 14- ஆம் தேதி அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள, நியூ ஆர்லியன்ஸ் மோரியல் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. அதாவது இந்திய நேரப்படி ஜனவரி 15 ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை 6:30 மணிக்கு நடைபெற்றது . அதேபோல அமெரிக்கா நேரப்படி சனிக்கிழமை மாலை அதாவது ஜனவரி 14 இரவு 8 மணிக்கு அழகிப் போட்டி நடைபெற்றது. நடப்பு ஆண்டிற்கான இந்த போட்டியில் 84 நாடுகளைச் சேர்ந்த 86-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த ஆண்டு போட்டியில் கலந்துகொண்ட மங்களூருவைச் சேர்ந்த 25 வயதான திருமதி ராய்,டாப் 5-க்குள் வர முடியாமல் வெளியேறினார். கடந்த ஆண்டு மிஸ் திவா யுனிவர்ஸ் போட்டியில் வென்ற பெருமைக்குரியவரான இவர், 2021-இல் மூன்றாவது இடத்தைப் பிடித்து, இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் சந்து என்பவரிடம் தோற்றார். இதற்கு முன் இந்தியாவின் சார்பில் நடிகைகள் சுஷ்மிதா சென் (1994) மற்றும் லாரா தத்தா (2000) ஆகியோர் மட்டுமே மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளனர்.

 

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்’போனி கேப்ரியல் 2022- ஆம் ஆண்டுக்கான புதிய பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். மேலும் $5.58 மில்லியன் மதிப்பிலான நீலக்கல் பதிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்துடன் அவர் கௌரவிக்கப்பட்டார்.இவரைத்தொடர்ந்து மிஸ் வெனிசுலா முதல் ரன்னர் அப் ஆகவும், மிஸ் டொமினிகன் குடியரசு இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் முடிசூட்டப்பட்டது.

மிஸ் யூனிவெர்ஸ் பட்டத்தை வென்ற ஆர்’போனி கேப்ரியல், ஒரு ஆடை வடிவமைப்பாளர், மாடல் மற்றும் தையல் பயிற்றுவிப்பாளர் ஆவார் . வாழ்க்கையின் மீது ஆர்வம் கொண்ட இவர், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, துணிகள் மற்றும் ஜவுளிகளைக் கொண்டு புதிய வடிவிலான டிசைன்களை உருவாக்குவதை மிகவும் நேசித்து செய்வாராம். வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்,2018 இல், ஃபேஷன் டிசைனில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் தற்போது சொந்தமாக தனது பெயரிலேயே ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

மிஸ் யுஎஸ்ஏ 2022 இன் நம்பிக்கைக்கு உரியவராக முத்திரை குத்தப்பட்ட ஆர்’போனி கேப்ரியலிடம் இறுதிக் கேள்விகேட்கப்பட்டது.

அதில் “நீங்கள் மிஸ் யுனிவர்ஸை வென்றால், இது ஒரு அதிகாரம் மற்றும் முற்போக்கான அமைப்பு என்பதை நிரூபிக்க எவ்வாறு செயல்படுவீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், மிகவும் ஆர்வமுள்ள வடிவமைப்பாளராக, 13 ஆண்டுகளாக தையல் செய்து வருவதால், நான் ஃபேஷனை நன்மைக்கான சக்தியாகப் பயன்படுத்துகிறேன். எனது தொழில்துறையில், நான் எனது ஆடைகளை தயாரிக்கும் போது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் மூலம் மாசுபடுவதை குறைத்து வருகிறேன். மனித கடத்தல் மற்றும் குடும்ப வன்முறையில் இருந்து தப்பிய பெண்களுக்கு நான் தையல் வகுப்புகளை கற்பிக்கிறேன். மற்றவர்களுக்கு முதலீடு செய்வதும், நமது சமூகத்தில் முதலீடு செய்வதும், உங்கள் தனித்துவமான திறமையைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவதும் மிகவும் முக்கியம் என்பதால் நான் அதை மாற்றும் தலைவராக பயன்படுவேன்.நம் அனைவருக்கும் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது, அந்த விதைகளை நம் வாழ்வில் (மற்றவர்களில்) விதைக்கும்போது, ​​அவர்களை மாற்றுகிறோம், அதை மாற்றத்திற்கான வாகனமாகப் பயன்படுத்துகிறோம்.” என்று கூறியிருந்தார்.

இப்போட்டியில் கலந்துகொண்ட முதல் 16 போட்டியாளர்கள் போர்டோ ரிக்கோ, ஹைட்டி, ஆஸ்திரேலியா, டொமினிகன் குடியரசு, லாவோஸ், தென்னாப்பிரிக்கா, போர்ச்சுகல், கனடா, பெரு, டிரினிடாட் மற்றும் டொபாகோ, குராக்கோ, இந்தியா1, வெனிசுலா, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

முதல் ரன்னர் அப்: மிஸ் வெனிசுலா

ஆண்ட்ரீனா மார்டினெஸ் டொமினிகன் குடியரசின் சாண்டியாகோ டி லாஸ் கபல்லரோஸில் பிறந்தவர். இவர் பிராங்க்ஸில் வளர்ந்ததால், அங்கையே பிராங்க்ஸ் பிரிட்ஜஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு, அவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின், சிட்டி காலேஜ்ஜில், பயின்றார், அங்கு அவர் உளவியல் மற்றும் லத்தீன் அமெரிக்க ஆய்வுகளில் இளங்கலைப் பட்டத்துடன், கம்லாட் பட்டமும் பெற்றுள்ளார்.

இரண்டாவது ரன்னர் அப்: மிஸ் டொமினிகன் குடியரசு

Andreína Martínez Founier-Rosado ஒரு டொமினிகன்-அமெரிக்க மாடல். ஸ்டன்னர் மார்டினெஸ் டொமினிகன் குடியரசின் சாண்டியாகோ டி லாஸ் கபல்லரோஸில் பிறந்தார். தி பிராங்க்ஸில் வளர்ந்த இவர், உளவியல் மற்றும் லத்தீன் அமெரிக்க ஆய்வுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.