குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று…

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று மதியம் முதல் இரவு வரை நீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, பழைய குற்றாலத்திலும், மாலையில் ஐந்தருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், இரவில் நீர் வரத்து குறைந்துள்ளதால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலம் பகுதிகளில் தற்போது மெல்லிய மழைத் துளியுடன், குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.