இளையராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ள எம்.பி. பதவி தமிழர்களுக்கான கெளரவம் என்று எல்.முருகன் பேசியுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று கடற்கரைகளில் இருந்த குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார், பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கடற்கரையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றினர்.
அதைத்தொடர்ந்து, எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இளையராஜாவின் திறமைக்கு மதிப்பு வழங்கி அவரை கெளரவிக்கும் வகையில் பிரதமர் மோடி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கி உள்ளார். இளையராஜாவிற்கு எம்.பி. பதவி கிடைத்தது தமிழர்களுக்கு கிடைத்த கெளரவம் என்றார்.
-ம.பவித்ரா








