உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க உயர் அதிகாரிகள்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க உயர் அதிகாரிகள் சந்தித்து போரினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.  உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க உயர் அதிகாரிகள் சந்தித்து போரினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். 

உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளன. இருப்பினும் பின்வாங்காமல் ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே இரு நாடுகள் இடையே அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள், பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன. சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் சென்று கீவ் நகரின் தெருக்களில் நடந்து சென்று போரினால் அந்தப்பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து பார்வையிட்டார்.

இதனிடையே உக்ரைனில் துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தாலும் உக்ரைன் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் சொல்லவில்லை. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்றனர். அங்கு அவர்களை வரவேற்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடைபெற்று வரும் போராட் நாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.