அரசு கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்

அரசு கலை மற்றும் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாளாகும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.  2021-22-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.…

அரசு கலை மற்றும் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாளாகும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

2021-22-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட கால தாமதமானது.

இந்நிலையில் கடந்த 22ந்தேதி காலை சிபிஎஸ்இ பிளஸ் 2க்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இதையடுத்து அரசு கலை –அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்த நிலையில், அவகாசம் 27ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயர்க்கல்வித்துறை தெரிவித்தது.

இதையடுத்து 163 அரசு கலை, அறிவியல் கல்லூரியில் B.A., B.Sc., B.Com., BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் சேர இதுவரை 4,01,414 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 3,30,132 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர். 2,93,912 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாளாகும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.