தொடர்ந்து பெய்து வரும் கோடைமழை காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக, தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை தென் மாவட்டங்களில்…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து
வரும் கோடை மழை காரணமாக, தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால்
விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை தென் மாவட்டங்களில்
பிரசித்தி பெற்ற காய்கறி சந்தை ஆகும். இங்கு தக்காளிக்கு என பிரத்தியேகமாக
சந்தை அமைக்கப்பட்டு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது
தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக, தக்காளி விலை கிலோ
ஒன்றுக்கு 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

மேலும், தக்காளி எடுத்து வரும் கூலி அளவுக்கு கூட விலையில்லாத நிலை
ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 14 கிலோ அடங்கிய ஒரு
பெட்டி 70 முதல் 100 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தக்காளி விளைச்சல் அதிகரிப்பால்
இந்த விலையானது வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், இதனால் விவசாயிகள் வேதனை
அடைந்துள்ளனர்.

—-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.