பாலக்கோடு பகுதியில் கோடை வெப்பத்தால் தக்காளி வரத்து அதிகரித்து விலை சரிந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்காடு, மாரண்டஅள்ளி , வெள்ளிச்சந்தை, காரிமங்கலம், மற்றும் பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி பழங்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தக்காளி செடியில் உள்ள பழங்கள் பழுத்து காணப்படுகின்றன.
இதற்கிடையே அதிக அளவில் தக்காளி பழங்கள் பழுக்கும் நிலையில் இருப்பதால் தக்காளி மார்கெட்டில் தக்காளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி விலை 25 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு தக்காளின் விலை ஒரு கிலோ 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒரே மாதத்தில் தக்காளி வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளதாக தக்காளி பயிரிட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
—-கோ. சிவசங்கரன்







