நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டரில் பால் அபிஷேகம்!

உலகப் புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 1008 லிட்டர் பாலபிஷேகம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத…

உலகப் புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 1008 லிட்டர் பாலபிஷேகம் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு வடை மாலை சாத்தியப்பின் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், தேன், 1008 லிட்டர் பால், தயிர் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வணங்கி சென்றனர். மேலும் திருத்தலத்தில் ஆஞ்சநேயருக்கு உகந்த வெற்றிலை மாலை அணிவித்து பக்தர்கள் வணங்கி சென்றனர்.

—-சே.அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.