ஜூலை 12-ம் தேதி வெளியாகும் டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள்’ 7வது பாகம்!

  டாம் குரூஸ் நடித்துள்ள ‘மிஷன் இம்பாசிபிள் டெட் ரெகனிங் பாகம் 1’ படம் வரும் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்…

 

டாம் குரூஸ் நடித்துள்ள ‘மிஷன் இம்பாசிபிள் டெட் ரெகனிங் பாகம் 1’ படம் வரும் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன் இம்பாசிபிள்’ சீரிஸ் படங்களும் ஒன்று. ஆக்‌ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் அடுத்து வெளியாக உள்ள மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7-ம் பாகத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த படத்தின் 7வது பாகத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்றால் பல முறை தள்ளிப்போடப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது ரிலீஸ் செய்ய தயாராக உள்ளது. கிறிஸ்டோபர் மேக்குயரீ இயக்கும் இந்தப் படத்தில், டாம் குரூஸுடன், விங் ராமிச், சைமன் பெக், ரெபெக்கா பெர்குசான் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர். இந்த பாகத்துக்கு ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங் (பாகம் 1)’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ள இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டி உள்ளார் டாம் க்ரூஸ். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் வரும் ஜூலை 12-ம் தேதியும், அடுத்த பாகம் 2024-ம் ஆண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.