41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் பதக்கம் வென்றது இந்தியா

41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் இந்தியா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியிடம் 2-5 என்கிற…

41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் இந்தியா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியிடம் 2-5 என்கிற கோல் கணக்கில் தோல்வியுற்றது.

கடந்த 41 ஆண்டுகளாக பதக்கம் வெல்லாமல் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதே போல அரையிறுதிக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய ஜெர்மனி அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து ஜெர்மனியை எதிர்த்து இந்தியா கடுமையாக போராடி 5-4 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது. பிரதமர் மோடி இந்திய இந்த வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.